செய்திகள்

பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாத தேர்வு கால அட்டவணை வெளியீடு

Published On 2017-08-24 00:26 GMT   |   Update On 2017-08-24 00:27 GMT
பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:

பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

செப்டம்பர் 25-ந் தேதி- தமிழ் முதல் தாள்.

26-ந் தேதி- தமிழ் 2-ம் தாள்.

27-ந் தேதி- ஆங்கிலம் முதல் தாள்.

28-ந் தேதி- ஆங்கிலம் 2-ம் தாள்.

அக்டோபர் 3-ந் தேதி- இயற்பியல், பொருளாதாரம்.

4-ந் தேதி- வேதியியல், கணக்குப்பதிவியல்.

5-ந் தேதி- கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை.

6-ந் தேதி- உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்.

7-ந் தேதி- வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

9-ந் தேதி- ஆங்கிலம் தகவல் தொடர்பு, இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்.

11-ந் தேதி- புள்ளியல், நர்சிங் (பொது), அரசியல் அறிவியல், அனைத்து தொழில் தேர்வுகள்.

இந்த தேர்வுக்கு தனித்தேர்வர்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு சேவை மையங்களுக்கு சென்று இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். அரசு சேவை மையங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 
Tags:    

Similar News