செய்திகள்

பாராளுமன்றத்தில் சிறப்பு விவாதம்: தம்பித்துரை தமிழில் பேசியதற்கு எதிர்ப்பு

Published On 2017-08-09 11:09 GMT   |   Update On 2017-08-09 11:09 GMT
வெள்ளையனே வெளியேறு இயக்க 75ஆம் ஆண்டு தினத்தில் மக்களவையில் தம்பிதுரை தமிழில் பேசியதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை:

மகாத்மா காந்தி 1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார். இதனால் நாடு முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டார்.

அதில் வெள்ளையனே வெளியேறு இயக்க 75-வது ஆண்டு தினம் கொண்டாடும் இந்த நேரத்தில் இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். 2022-ல் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் பாராளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம் நடந்தது. இதில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, சபாநாயகர் மற்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் பேசினார்கள். பிரதமர் மோடி பேசுகையில், ஊழல் உள்ளுக்குள் இருந்து கொண்டு நம்மை சாப்பிடுகிறது. நேர்மையான முறையில் பணிகள் நடக்க போராடுவோம் என்றார்.

துணை சபாநாயகர் தம்பித்துரை பேசும்போது, தமிழகத்தில் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி எடுத்துக் கூறினார். அப்போது அவர் தமிழில் பேசினார். இதற்கு எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தம்பித்துரை மீண்டும் ஆங்கிலத்தில் பேசினார்.
Tags:    

Similar News