செய்திகள்
போலீஸ் நிலையம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

உசிலம்பட்டியில் போலீசை கண்டித்து வக்கீல்கள் சாலை மறியல்: பொதுமக்கள் அவதி

Published On 2017-07-25 17:30 GMT   |   Update On 2017-07-25 17:30 GMT
உசிலம்பட்டியில் இன்று போலீசை கண்டித்து வக்கீல்கள் சாலைமறியல் செய்தனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
உசிலம்பட்டி:

தேனி மாவட்ட வக்கீல் சங்க செயலாளராக இருப்பவர் கிருஷ்ணகுமார். இவர் இன்று காலை வேலை நிமித்தமாக காரில் மதுரைக்கு புறப்பட்டார்.

உசிலம்பட்டி அருகே வந்தபோது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வாகன சோதனைக்காக காரை நிறுத்தினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி வக்கீல் சங்க நிர்வாகி சொக்கநாதன் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் போலீசாரை கண்டித்து கோ‌ஷமிட்டனர். தொடர்ந்து வத்தலக்குண்டு மெயின் ரோட்டிலும், மதுரை மெயின் ரோட்டிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து. கடுமையாக பாதிக்கப்பட்டது பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

மறியல் செய்த வக்கீல்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
Tags:    

Similar News