செய்திகள்

ராஜபாளையத்தில் மனைவியை சித்ரவதை செய்ததாக என்ஜினீயர் கைது

Published On 2017-07-19 17:29 GMT   |   Update On 2017-07-19 17:29 GMT
ராஜபாளையத்தில் மனைவியை சித்ரவதை செய்ததாக என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். மாமனார்-மாமியார் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் சமுசிகா புரத்தை சேர்ந்தவர் அபிநயலட்சுமி (வயது 23). இவருக்கும் விஷ்ணு நகரைச் சேர்ந்த என்ஜினீயர் சரவண பிரகாஷ் (33) என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபிநயலட்சுமி, பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அதன்பிறகு அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், திருமணத்தின் போது 52 பவுன் நகை, ரூ.2 லட்சம் சீர்வரிசை வழங்கப்பட்டது. திருமணமான சில நாட்களில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மனம் புண்படும்படி பேசி சித்ரவதை செய்ததாகவும், மாமனார் அழகு, தனது நகைகளை பறித்து வைத்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெற்றோர் வீடு திரும்பிய அபிநயலட்சுமி, கணவருடன் சேர்ந்து வாழ நினைத்தாலும் அதற்கு கணவர் குடும்பத்தினர் இடையூறாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கோர்ட்டு உத்தரவுப்படி ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் அமுதா விசாரணை நடத்தி, சரவண பிரகாஷ் அவரது பெற்றோர் அழகு-வீரலட்சுமி, சகோதரி கவுசல்யா பாரதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சரவண பிரகாஷ் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News