செய்திகள்

பொன்னேரியில் மின்வயர் அறுந்து விழுந்து 8 மாடுகள் பலி

Published On 2017-06-28 09:28 GMT   |   Update On 2017-06-28 09:28 GMT
பொன்னேரி வெள்ளாம் பாக்கம் வயல்வெளி பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில் அவ்வழியே வந்த 8 மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்தன.
பொன்னேரி:

பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு பகுதியில் நேற்று மாலை திடீரென சூறைகாற்றுடன் மழை பெய்தது. சுமார் 15 நிமிடம் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் காற்றின் வேகத்தில் வெள்ளாம் பாக்கம் வயல்வெளி பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது.

இதில் அவ்வழியே வந்த 8 மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்தன.

அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் விவசாயிகள் யாரும் அவ்வழியே செல்லாததால் உயிர் தப்பினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “வார்தா புயலின் போது மின்கம்பம் சரிந்தது. மின் கம்பியும் அறுந்து விழும் நிலையில் காணப்பட்டது.

இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இப்போது சாதாரன மழை-காற்றுக்கே மின்கம்பி அறுந்து விழுந்துவிட்டது. மனித உயிர் பலி வாங்குவதற்கு முன்பு பழுதான மற்ற மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News