செய்திகள்

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு புதிய கட்டிடங்கள்: எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

Published On 2017-06-26 03:21 GMT   |   Update On 2017-06-26 03:21 GMT
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்படவுள்ள வகுப்பறை, ஆய்வகம், விடுதி கட்டிடங்களுக்கு எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரில், உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுகள் சார்ந்த படிப்புகள், ஆராய்ச்சிகளை சர்வதேச அளவில் மேற்கொள்வதற்காக 125 ஏக்கர் நிலப்பரப்பில் 2005-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இங்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் நிர்வாக கட்டிடத்தின் முதல் தளம், ரூ.1 கோடியே 37 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக துணைவேந்தர், பதிவாளர், ஆசிரியர் மற்றும் அலுவலர் குடியிருப்புகள், ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவருக்கான விடுதிக் கட்டிடம், ரூ.72 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியருக்கான விடுதி கட்டிடம், என மொத்தம் ரூ.4 கோடியே 81 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், ரூ.7 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள வகுப்பறை, ஆய்வகம், விடுதி கட்டிடங்களுக்கு எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News