செய்திகள்

பாலில் கலப்படம் எனக் கூறி எந்த நிறுவனத்தையும் மிரட்டும் நோக்கமில்லை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2017-06-22 06:45 GMT   |   Update On 2017-06-22 06:46 GMT
பாலில் கலப்படம் எனக் கூறி எந்த நிறுவனத்தையும் மிரட்டும் நோக்கமில்லை என்று சட்டப்பேரவையில் ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் அளித்துள்ளார்.
சென்னை:

பால் கலப்படம் தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாலில் கலப்படம் எனக் கூறி எந்த நிறுவனத்தையும் மிரட்டும் நோக்கமில்லை என்று தெரிவித்தார்.

மேலும், "மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். பால் கலப்படத்தை கண்டறிய மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாலில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.



முன்னாதாக, தனியார் நிறுவனங்கள் சில தங்களது பாலில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களை கலப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிகரடியாக பேட்டி கொடுத்தார். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News