செய்திகள்

பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

Published On 2017-06-21 10:12 GMT   |   Update On 2017-06-21 10:12 GMT
தற்போது 5 மாவட்டங்களிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் திறப்பு 150 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கூடலூர்:

முல்லைப்பெரியாறு அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பெரியாறு அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை எதிர்பார்த்தபடி பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தே காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் உயராததால் 200 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் 75 கன அடி நீராக குறைக்கப்பட்டது.

தற்போது 5 மாவட்டங்களிலும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் திறப்பு 150 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 108.80 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 150 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 22.11 அடியாக உள்ளது. வரத்து இல்லை. மதுரை மாவட்ட குடிநீருக்காக 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 31.40 அடி. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 94.62 அடியாக உள்ளது. 1 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு அணைப் பகுதியில் 2.2. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News