செய்திகள்

சிறுநீரக நோயாளிகள் குறைந்த அளவே தண்ணீர் குடிக்க வேண்டும்: டாக்டர்கள் எச்சரிக்கை

Published On 2017-05-28 07:21 GMT   |   Update On 2017-05-28 07:21 GMT
சிறுநீரக நோயாளிகள் குறைந்த அளவே தண்ணீர் குடிக்க வேண்டும், இல்லாவிட்டால் ரத்த அழுத்தம் அதிகமாகி மூச்சு திணறல் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:

கோடை வெயில் சுட்டெரிப்பதால் கடும் வெப்பம் நிலவுகிறது. அதனால் பலர் வெப்ப நோய்களுக்கு ஆளாகி ஆஸ்பத்திரிகளுக்கு வருகின்றனர்.

இந்த நிலையில் வெப்ப நோய்களில் இருந்து தப்பிக்க பொதுமக்களுக்கு டாக்டர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக பொதுமக்கள் தினமும் 12 முதல் 14 டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும் என அறிவுரை வழங்குகின்றனர்.

ஆனால் இந்த அறிவுரை சிறுநீரகம் பாதிப்பு அடைந்த நோயாளிகளுக்கு பொருந்தாது. இவர்கள் அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

சிறுநீரகம் செயல் இழந்து ரத்த சுத்திகரிப்பு செய்யும் நோயாளிகள் நாள் ஒன்றுக்கு 32 அவுன்ஸ் அல்லது 1000 மிலி அதாவது 1 லிட்டர் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்.

சிறுநீரகம் செயல்பாடு இழந்தவர்கள் சிறுநீர் வெளியேறும் அளவு மட்டுமே மிக குறைந்தஅளவாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்கும் பட்சத்தில் உடலில் இருந்து கூடுதல் அளவு சிறுநீரை வெளியேற்றும் திறனை சிறுநீரகம் இழந்து விடும்.

இதனால் ரத்த அழுத்தம் அதிகமாகி இதயம் செயல்படுவதில் சிக்கல் ஏற்படும். அதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்படும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
Tags:    

Similar News