செய்திகள்

மாட்டு இறைச்சிக்கு தடை: பா.ஜனதா அரசுக்கு நாராயணசாமி கடும் கண்டனம்

Published On 2017-05-27 08:03 GMT   |   Update On 2017-05-27 08:03 GMT
இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்த மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கு நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:-

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு 3 ஆண்டுகள் முடிந்து 4-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. ஆட்சியின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் விழா கொண்டாட போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த 3 ஆண்டுகளில் தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்போம் என வாக்குறுதி அளித்தனர்.

ஆனால், 3 ஆண்டுகளில் 45 லட்சம் பேருக்கு கூட வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த வாக்குறுதிகள் கூட மத்திய அரசால் நிறைவேற்ற முடியவில்லை.

மத்திய காங்கிரஸ் ஆட்சி இருந்த போது பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருந்தது. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது கூட பொருளாதார வளர்ச்சியை 7.5 சதவீதமாக காங்கிரஸ் அரசு நிலை நிறுத்தியது.

ஆனால், பாரதீய ஜனதா முதலாம் ஆண்டில் 6.5, 2-ம் ஆண்டில் 6.7, 3-ம் ஆண்டில் 7.1 சதவீதம் என பொருளாதார வளர்ச்சி உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் கூட மத்திய அரசு குறிப்பிட்ட முன்னேற்றத்தை எட்டவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நகர்ப்புற மேம்பாடு, கிராமப்புற கல்வி, கிராமப்புற சுகாதாரம் ஆகிய திட்டங்களின் பெயரை மாற்றி புதிய திட்டங்கள் போல் பாரதீய ஜனதா அரசு அறிவித்துள்ளது. திட்டக்குழுவை கலைத்து நிதி அயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

ஆனால், வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய தினம் மத்திய பாரதீய ஜனதா அரசு ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.



காளை மாடுகள், கன்றுக்குட்டி, எருது, ஒட்டகம் ஆகியவற்றின் இறைச்சியை சாப்பிட தடை விதித்துள்ளனர்.

இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களிலும், கேரளாவிலும் மாட்டு இறைச்சியே பிரதான உணவாக உள்ளது.

அடுத்து ஆடு, கோழி, மீன் போன்றவைகளையும் சாப்பிட கூடாது என மத்திய அரசு அறிவிக்கலாம். நாட்டு மக்கள் சாப்பிடாமல் பட்டினியோடு இருந்தால் நாடு வளர்ச்சி அடையும் என்று கூறவும் வாய்ப்பு உள்ளது.

நாட்டு மக்கள் எதை சாப்பிட வேண்டும், எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பதில் எல்லாம் மத்திய அரசு தலையிட முடியாது. இது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவது ஆகும்.

மத்திய பாரதீய ஜனதா அரசு சர்வாதிகாரத்தோடு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

புதுவையில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் ஏராளமானோர் வசிக் கிறார்கள். அவர்கள் உணவில் மாட்டு இறைச் சியை பிரதானமாக பயன் படுத்துகிறார்கள். ஆனால், இதனை சாப்பிடுவதை அரசால் தடுக்க முடியாது.

எனவே, பிரதமர் இந்த முடிவை மாற்றி கொண்டு மாட்டு இறைச்சி தடையை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News