செய்திகள்

நடிகர்கள் சொல்வதை கேட்டு மக்கள் ஏமாறுகிறார்கள்: சீமான்

Published On 2017-05-19 06:02 GMT   |   Update On 2017-05-19 06:02 GMT
நடிகர்கள் சொல்வதை கேட்டு மக்கள் ஏமாறுகிறார்கள் என பாம்பனில் நடைபெற்ற வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியுள்ளார்.
ராமேசுவரம்:

இலங்கை போரின்போது உயிர் நீத்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் பாம்பனில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

இலங்கையில் இனப்படுகொலை நடந்ததை மறக்க முடியுமா? இதுவரை இதற்கு நீதி கிடைக்கவில்லை. சிங்கள ராணுவத்தில் ஒரு தமிழர் கூட இல்லை.

இதனால் தான் தமிழர்கள் அங்கு கொல்லப்பட்டனர். இதனை நினைவு கூறும் வகையில் மே 18-ந் தேதியை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக அனுசரிக்கிறோம்.


சமீபத்தில் கூட பிரதமர் மோடி இலங்கை சென்றார். அப்போது அவர் மீனவர் பிரச்சனை குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. இலங்கையை எதிரிநாடு என இந்தியா அறிவித்து பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும்.

திராவிட கட்சிகள், காங்கிரஸ், பா.ஜனதா ஆகியவை தமிழர்கள் பற்றி கவலைப்படுவதில்லை. பா.ஜனதாவின் எடுபிடி அரசாக எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்பட்டு வருகிறது.

நாம் தமிழர் கட்சியும் தமிழகத்தில் முக்கியமான கட்சியாக வரும். அப்போது மற்ற கட்சிகளுக்கு நாம் சிம்ம சொப்பனமாக விளங்குவோம். நடிகர்கள் சொல்வதை கேட்டு மக்கள் ஏமாறுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News