செய்திகள்

செம்மலை கருத்து பற்றி ஓ.பி.எஸ். விளக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2017-04-29 05:50 GMT   |   Update On 2017-04-29 10:50 GMT
அ.தி.மு.க. இரு அணிகளும் இணையக்கூடாது என்று செம்மலை சொல்லும் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தா? இல்லையா? என்பதை ஓ.பன்னீர்செல்வம்தான் விளக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை:

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற செம்மலை எம்.எல்.ஏ. “ஓ.பி.எஸ்.அணி, அ.தி.மு.க. (அம்மா) அணியுடன் இணையக் கூடாது என்று நிர்வாகிகள் கருத்து தெரிவிப்பதாகவும், இதை தலைமையிடத்தில் தெரிவிப்பேன் என்றும் கூறி இருந்தார்.

இதுபற்றி அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் இன்று கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. இரு அணிகளும் இணையக்கூடாது என்று செம்மலை சொல்லும் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தா? இல்லையா? என்பதை ஓ.பன்னீர்செல்வம்தான் விளக்க வேண்டும்.

எங்களைப் பொறுத்த வரை இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். காலம் கனிந்த பிறகும் ஓ.பி.எஸ். தரப்பினர் பேச்சு வார்த்தைக்கு வர மறுக்கிறார்கள். நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம். பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து விட்டோம்.



புரட்சித்தலைவி அம்மா ஆசியால் அ.தி.மு.க. ஆட்சி 4 ஆண்டு மட்டுமல்ல, அதற்கு மேலும் தொடரும். மக்கள் இந்த ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள்.

கட்சியும், ஆட்சியும் சீரான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தலைமை நிலைய செயலாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அம்மாவின் கனவை நினைவாக்க எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக, எழுச்சியாக கொண்டாடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

எங்கள் அணியில் எந்த குழப்பமும் இல்லை. அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் தினமும் தலைமை கழகத்துக்கு வந்து மனுக்களை பெற்று வருகின்றனர்.

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள சிறு சலசலப்பை வைத்து சைக்கிள் கேப்பில் ஆட்சியை பிடிக்கலாம் என்று மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News