செய்திகள்

மெரீனா போராட்டத்தில் வெளிநாட்டு பானங்களுக்கு எதிராக போர்க்கொடி

Published On 2017-01-21 08:13 GMT   |   Update On 2017-01-21 08:13 GMT
மெரீனா போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் வெளிநாட்டு பானங்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர். பொது மக்களுக்கு இலவசமாக வழங்கினார்கள்.

மெரீனா போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் வெளிநாட்டு பானங்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர்.

அந்த குளிர்பானங்களை கயிற்றில் கட்டி தூக்கில் தொங்க விட்டப்படி ஊர்வலமாக சென்றனர். குளிர் பானங்களை ரோட்டில் கொட்டி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

வெளிநாட்டு குளிர் பானங்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். அதை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த மாட்டோம் என்றும் உறுதி ஏற்றனர்.

இதுபற்றி இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசினர். அப்போது, “இந்தியாவில் கிடைக்கும் இயற்கை பானங்களான இளநீர் போன்றவற்றை நாம் பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தனர்.

கடற்கரை சாலையில் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் கூட்டாக சேர்ந்து லாரிகளில் ஆயிரக்கணக்கான இளநீர்களை கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும், பொது மக்களுக்கும் இலவசமாக வழங்கினார்கள்.

Similar News