செய்திகள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெற்றி

Published On 2021-05-02 17:06 GMT   |   Update On 2021-05-02 17:06 GMT
சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சென்னை:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன.

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில்  கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர்.
 
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் 1,04,462 வாக்குகள் பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முக ஸ்டாலின் வெற்றி பெற்றார்.
Tags:    

Similar News