செய்திகள்
வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கடம்பூர் ராஜூ பெற்றுக்கொண்ட காட்சி.

கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூ வெற்றி

Published On 2021-05-02 15:30 GMT   |   Update On 2021-05-02 15:30 GMT
கோவில்பட்டி தொகுதியில் 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றார்.
கோவில்பட்டி:

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக சார்பில் டிடிவி தினகரன், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கதிரவன், நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி ஆகியோர் போட்டியிட்டனர்.

இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து கடம்பூர் ராஜூவும், டிடிவி தினகரன் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இறுதியாக கோவில்பட்டி தொகுதியில் 12,403 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ வெற்றி பெற்றார். அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் தோல்வியை தழுவினார். 

இறுதியாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கடம்பூர் ராஜூ பெற்றுக்கொண்டார். 
Tags:    

Similar News