செய்திகள்
கனிமொழி

அனுமதி இன்றி பிரசாரம் செய்ததாக புகார்: கனிமொழி எம்.பி.- அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு

Published On 2021-03-30 04:38 GMT   |   Update On 2021-03-30 04:38 GMT
கனிமொழி எம்.பி. அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தேர்தல் அலுவலர் மாரிமுத்து புகார் அளித்தார்.
கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் (28-ந்தேதி) கோவில்பட்டி பத்திர காளியம்மன் கோவில் அருகே பிரசாரம் செய்தார்.

இந்நிலையில் கனிமொழி எம்.பி. அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தேர்தல் அலுவலர் மாரிமுத்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் கனிமொழி எம்.பி. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதே போன்று கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக உரிய அனுமதி பெறாமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக அ.ம.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளர் மாணிக்கராஜா, நகர செயலாளர் கார்த்திக் ஆகியோர் மீதும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News