செய்திகள்
ராமதாஸ்

சாராயக் கடையை முதன் முதலில் கொண்டு வந்தது கருணாநிதி தான் - ராமதாஸ்

Published On 2021-03-28 05:21 GMT   |   Update On 2021-03-28 05:21 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 7 சாராய ஆலைகளை கொண்டு வந்தது திமுக தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

காஞ்சீபுரம்:

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் மொத்தம் 11 சாராய ஆலைகள் உள்ளன. அதில் 7 ஆலைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் உள்ளது. அந்த சாராய ஆலைகளை கொண்டு வந்தது தி.மு.க..

தி.மு.க.வால் செயல்படும் மது ஆலையால் வருடத்திற்கு 2 லட்சம் பேர் இறக்கின்றனர்.

காஞ்சிபட்டு உடுத்தினால் பெண்கள் தேவதையாக மாறி விடுவார்கள். ஆனால் தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் போலி பட்டு சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக நெசவு தொழில் நலிந்து வருகிறது.

வெளி மாநிலத்தில் இருந்து பட்டு புடவை வாங்க வரும் பொதுமக்களிடம் போலி பட்டு சேலைகள் விற்பனை செய்ய ஒரு கூட்டம் சங்கமே உருவாக்கியுள்ளது. அதனை தடுத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காஞ்சீபுரம் பெருநக ராட்சியை மாநகராட்சியாக மாற்ற தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு விவசாயி மீண்டும் தமிழ்நாட்டை ஆள போகிறார்.

ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாத தமிழகத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறேன். சாராயம் குடிப்பதனால் வருடத்திற்கு 2 லட்சம் பேர் இறக்கிறார்கள்.

44 சமுதாய தலைவர்கள், மதகுருமார்களுடன் சேர்ந்து கலைஞரை சந்தித்தேன். சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினேன்.

இதன் எதிரொலியாக விற்பனை ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது. சாராயக் கடையை முதன் முதலில் கொண்டுவந்தது தி.மு.க. தலைவர் கருணாநிதி தான்.

இவ்வாறு ராமதாஸ் பேசினார். 

Tags:    

Similar News