செய்திகள்
உம்மன்சாண்டி

கேரளாவில் காங்.கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் - முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பேட்டி

Published On 2021-03-25 09:42 GMT   |   Update On 2021-03-25 09:42 GMT
கேரளாவில் பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் ரகசிய உடன்பாடு வைத்து செயல்படுகின்றது என்று முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை:

கோவையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. கூட்டணி வேட்பாளர்கள் அங்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். எனவே தற்போது கேரளாவில் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

கேரள தங்க கடத்தல் விவகாரம் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் இருக்கின்றது. எனவே அதுகுறித்து தற்போது பதில் கூற முடியாது.

மேலும் பா.ஜ.கவால் காங்கிரஸ் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கேரளாவில் பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் ரகசிய உடன்பாடு வைத்து செயல்படுகின்றது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான பாலசங்கரின் பேச்சு இதை உறுதிபடுத்தும் படியாக உள்ளது. காங்கிரஸ் அனைத்து வகைகளிலும் பா.ஜ.கவை தீவிரமாக எதிர்த்து வருகின்றது. தமிழகத்தில் இடது சாரிகளுடன் இணைந்தும் மற்ற மாநிலங்களில் சூழலுக்கு ஏற்றபடியும் காங்கிரஸ், பா.ஜனதாவை எதிர்த்து வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News