செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு- விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டி

Published On 2021-03-14 16:04 GMT   |   Update On 2021-03-14 16:04 GMT
தேமுதக துணை செயலாளர் பார்த்தசாரதி விருகம்பாக்கம் தொகுதியிலும், அனகை முருகேசன் பல்லாவரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
சென்னை:

அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற தேமுதிக, அமமுக தலைமையிலான அணியில் இணைந்தது . அமமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் தேமுதிக வெளியிட்டது. 

விருத்தாசலம் தொகுதியில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். அவரது மகன் விஜயபிரபாகரன் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோரும் போட்டியிடவில்லை.

கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். சேலம் மேற்கு தொகுதியில் அழகாபுரம் மோகன் ராஜ், பல்லாவரத்தில் அனகை முருகேசன் போட்டியிடுகின்றனர்.
Tags:    

Similar News