செய்திகள்
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

தி.மு.க கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

Published On 2021-03-10 07:44 GMT   |   Update On 2021-03-10 07:44 GMT
தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாடு இன்று கையெழுத்தானது.
சென்னை:

தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றிக்கு தலா 3 தொகுதியும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகியவற்றிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஒப்பந்தத்தில் மு.க.ஸ்டாலின்-கதிரவன் கையெழுத்திட்டனர்.
Tags:    

Similar News