லைஃப்ஸ்டைல்

பெண்களுக்கு உடை விஷயத்தில் கவனம் தேவை

Published On 2017-11-10 09:00 GMT   |   Update On 2017-11-10 09:00 GMT
அலுவலகம் செல்லும் பெண்கள் உடை விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். பெண்களின் உடை, நடை, பாவனைகளை வைத்தே அவர்களது குணநலன்களை பலரும் கணிக்கிறார்கள்.
அலுவலகம் செல்லும் பெண்கள் உடை விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் பெண்களின் உடை, நடை, பாவனைகளை வைத்தே அவர்களது குணநலன்களை பலரும் கணிக்கிறார்கள். அதனால் உடை அலங்காரத்தில் உஷாராக இருக்கவேண்டும்.

பெண்கள் உடை அலங்காரத்தில் எப்படி சிறந்து விளங்கலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்!

அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள், உடலமைப்பிற்கேற்ற உடைகளை அணிவது அவசியமானது. அவர்கள் பொதுவாக செய்யும் தவறு என்னவென்றால் இறுக்கமான உடைகளை அணிந்துவிடுகிறார்கள். அல்லது அதிக தளர்வான உடைகளை உடுத்திக்கொள்கிறார்கள். மார்டன் உடையாக இருந்தாலும், பாரம்பரிய உடையாக இருந்தாலும் அது பெண்களின் உருவத்தை அழகாக, கச்சிதமாக காட்டுமாறு அமையவேண்டும். உடுத்தும் உடை சவுகரியத்தையும் அளிக்கவேண்டும்.

நீங்கள் தேர்ந்தெடுத்த உடை உங்களுக்கு சிறிய அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அதை அலுவலகத்திற்கு அணிந்து செல்லவேண்டாம். இறுக்கமாக இருக்குமோ? அல்லது தளர்வாக இருக்குமோ? என்ற சந்தேகத்தை உண்டாக்கும் உடைகளை ஓரமாக வைத்துவிடுங் கள். ஏனெனில் உருவத்திற்கு ஏற்ப உடை பொருந்தாவிட்டல், மற்றவர்களின் கேலி-கிண்டலுக்கு ஆளாக நேரிடும். அது அலுவலக வேலைகளையும் பாதிக்கும். அலுவலக நட்பையும் பாதிக்கும்.

வேலைக்கு செல்லும் பெண்கள் எளிமையான அதே நேரத்தில் கவர்ச்சியான சிறிய ஆபரணங்களை அணிந்துகொள்வது அவசியம். சில அணிகலன்கள் எல்லா பருவத்திற்கும்- காலத்திற்கும் ஏற்றதாகவும், என்றும் பசுமையாகவும், மிகவும் எளிமையாகவும் இருக்கும். அதனை அணிந்துகொள்ளுங்கள். இரண்டு சிறிய காதணிகள் அணியலாம். தோலினாலான அல்லது ஏதேனும் உலோகத்தினாலான கைக்கடிகாரம் அணியலாம். இதுபோன்ற நேர்த்தியான அலங்காரத்தில்தான் பெண்கள் அதிகம் பிரகாசிப்பார்கள்.



‘பெண்கள் தங்களின் உணர்ச்சிகளோடு அவர்களின் அலங்காரத்தை தொடர்புபடுத்துவார்கள்’ என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இளஞ்சிவப்பு, சிவப்பு, ஆரஞ்சு போன்ற நிறங்கள் பெண்களின் மனநிலையை வலுப்படுத்தி உற்சாகத்தை கொடுக்கக்கூடியவை. அதனால் சோர்வான நாட்களில் அத்தகைய நிறத்திலான உடைகளை அணியலாம். முக்கிய சந்திப்புகள், அலுவலக கலந்துரையாடல்களுக்கு இள நிற உடைகளை அணிவது அவசியம். சேலை, சுடிதார் என அலுவலக சூழலுக்கு ஏற்ப உடை அணிவது முக்கியமானது.

ஒரு சில நாட்களில் அதிக நேரத்தை வெளியே செலவிட நேரும். அது போன்ற சமயங்களில் பெண்கள் வழக்கமாக அணியும் நிறங்களைக் காட்டிலும் அடர்ந்த நிறங்களாலான உடையை தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதுபோன்ற சின்ன சின்ன மாற்றங்கள் பெண்களின் தோற்றத்திற்கு மெருகேற்றும்.

பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்திக்கொள்ள ‘மேக் அப்’ அவசியம்தான். மிக கவனமாக பரிசீலித்து உங்களுக்கு பொருத்தமான மேக்அப்பை தேர்ந்தெடுங்கள். வெளியே செல்லும்போது உங்கள் அணிகலன்கள் மற்றும் ஒப்பனைகள் அடுத்தவரின் கவனத்தை திருப்புமாறு அல்லாமல் நேர்த்தியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

பெண்களே! காலையில் அலுவலகத்திற்கு தயாராகும்போது, இதுபோன்ற சின்ன சின்ன குறிப்புகளை மனதில்கொள்ளுங்கள். தன்னம்பிக்கையோடு அலுவலகத்திற்கு பயணப் படுங்கள்!
Tags:    

Similar News