லைஃப்ஸ்டைல்

உதட்டின் வறட்சியை தடுக்க இரவில் வெண்ணெய் தடவுங்க

Published On 2017-10-06 06:42 GMT   |   Update On 2017-10-06 06:42 GMT
ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு வந்தால் உதடுகள் தானாகவே வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது.
ந‌மது உதடுகள் வறட்சி ஏற்படும் போது அல்ல‍து காய்ந்து விடும்போது, நாம் நமது நாவினால், உதடுகளை ஈரமாக்கிக் கொள்கிறோம். ஆனால் இது முற்றிலும் தவறான பழக்கம்.

ஆம் நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்ப‍நிலை உயர்ந்து விட்ட‍தன் அறிகுறியே இது.

ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்கு வதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோர்-ஐ அடிக்கடி நாம் பருகி வர வேண்டும்.

மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வேண்டும். மேலும் ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு படுக்கைக்கு செல்ல‍ வேண்டும்.

இவற்றின் காரணமாக நமது உடலில் ஏற்பட்டுள்ள‍ உஷ்ணம் குறையும், உதடுகள் தானாகவே வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது.
Tags:    

Similar News