லைஃப்ஸ்டைல்

ரவை - தேங்காய் பால் பாயாசம்

Published On 2017-11-16 07:25 GMT   |   Update On 2017-11-16 07:26 GMT
ரவை, தேங்காய் பால் சேர்த்து பாயாசம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ரவை - 1 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
முதல் தேங்காய் பால் - 1 கப்
இரண்டாம் தேங்காய் பால் - 2 கப்
பாதாம் - 10
திராட்சை - 15
முந்திரி - தேவைக்கு



செய்முறை:

முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும்.

பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவையை போட்டு லேசான பொன்னிறத்தில் வறுத்து, தனியாக தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

வறுத்த ரவையை ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

ரவை நன்கு கொதித்ததும், அதில் சர்க்கரையை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.

சர்க்கரை நன்கு கரைந்ததும், முதல் தேங்காய் பாலை ஊற்றி ஒரு கிளறு கிளறி, ஒரு கொதி விட்டு இறக்கி, அதன் மேல் முந்திரி, பாதாம், திராட்சையை தூவி பரிமாறவும்.

சூப்பரான ரவை - தேங்காய் பால் பாயாசம் ரெடி!!!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News