லைஃப்ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல் முள்ளு முறுக்கு

Published On 2017-10-17 07:06 GMT   |   Update On 2017-10-17 07:06 GMT
முள்ளு முறுக்கு செய்வது மிகவும் சுலபம். ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம். இந்த முறுக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.





mullu murukku, recipes, snacks, Muthusaram, diwali recipes, murukku, முறுக்கு, முள்ளு முறுக்கு, ஸ்நாக்ஸ்,





தேவையான பொருட்கள் :

அரிசி மாவு - ஒரு கப்,
உளுத்த மாவு - ஒரு டீஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு - ஒரு டீஸ்பூன்,
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.



செய்முறை :

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்த மாவு, பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு முறுக்கு மாவு பதமாக பிசையவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு மாவை முறுக்கு அச்சில் போட்டு காய்ந்த எண்ணெயில் போட்டு பிழிந்து வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான முள்ளு முறுக்கு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News