லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு விருப்பமான வெள்ளை சிக்கன் வறுவல்

Published On 2017-09-18 09:49 GMT   |   Update On 2017-09-18 09:49 GMT
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கனை வைத்து வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிக்கன் - ½ கிலோ
சின்ன வெங்காயம் - 10
வெள்ளை மிளகுத் தூள் - ½ டீஸ்பூன்
சீரகத்தூள் - ½ டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - ½ டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1½ டீஸ்பூன்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - ¾ டீஸ்பூன்.



செய்முறை :

வெங்காயத்தை தோல் நீக்கி கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கத்தியால் கீறல் போடவும்.

ஒரு பாத்திரத்தில் சிக்கனுடன் சின்ன வெங்காயம், மிளகுத் தூள், சீரகத்தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு மணிநேரம் ஊறவிடவும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.

சுவையான வெள்ளை சிக்கன் வறுவல் தயார்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News