லைஃப்ஸ்டைல்

தித்திப்பான பேசன் லட்டு செய்வது எப்படி

Published On 2017-08-19 09:49 GMT   |   Update On 2017-08-19 09:49 GMT
பேசன் லட்டு வட இந்தியாவில் எல்லா பண்டிகையின் போதும் விரும்பி செய்யப்படும் இனிப்பு வகை ஆகும். இந்த லட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கடலைப் பருப்பை சுத்தம் செய்து காய வைத்து, மிஷினில் கொடுத்து மாவாக இல்லாமல் மிகப்பொடியாக ரவை மாதிரி அரைக்கவும்.

கடலை மாவு - 2 கப்,
சர்க்கரை பொடித்தது - 1 கப்,
நெய் - 1/2 கப்,
முந்திரி, பாதாம் வறுத்து உடைத்தது - தலா 25
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை,
அலங்கரிக்க முழு முந்திரி அல்லது திராட்சை - தேவைக்கு.



செய்முறை :

ஒரு கடாயை மிதமான தீயில் வைத்து நெய் சேர்த்து கடலைமாவைக் கொட்டி மிதமாக கைவிடாமல் வறுக்கவும். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நிறம் மாறி வாசனை வரும்வரை வறுக்கவும்.

அடுத்து அதில் உடைத்த முந்திரி, பாதாம் சேர்க்கவும்.

வறுத்த மாவு அடிப்பிடிக்காமல் பொன்னிறமாக வந்ததும் இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி, சிறிது ஆறியதும் பொடித்த சர்க்கரை சேர்த்து லட்டுகளாக பிடிக்கவும்.

சூப்பரான பேசன் லட்டு ரெடி.

குறிப்பு:

மாவு சூடாக இருந்தால்தான் லட்டு பிடிக்க வரும். அதிகம் சூடு இருந்தால் சர்க்கரை கரையும். இந்த லட்டு 10-15 நாட்கள் வரை இருக்கும்.

கடலை மாவு மற்றும் நெய் சரியான அளவில் இருந்தால் தான் சரியான லட்டு பதம் கிடைக்கும்.

ஏலக்காய் பொடி சேர்த்தவுடன் லட்டுகள் பிடிப்பதற்கு வலுவாக இருந்தால் உள்ளங்கைகளில் கொஞ்சம் நெய் தடவிக் கொள்ளவும்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News