லைஃப்ஸ்டைல்

சூப்பரான ஸ்நாக்ஸ் உருளைக்கிழங்கு கார முறுக்கு

Published On 2017-08-18 09:47 GMT   |   Update On 2017-08-18 09:47 GMT
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான முறுக்கு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

உருளைக்கிழங்கு - 250 கிராம்,  
கடலை மாவு - ஒரு கப்,
அரிசி மாவு - ஒரு கப்,
நெய் - 3 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.



செய்முறை :

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, கடலை மாவு, அரிசி மாவு, நெய், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நீர் விட்டு கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

சூப்பரான உருளைக்கிழங்கு கார முறுக்கு ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News