சமையல்

இந்த 3 பொருள்கள் இருந்தால் போதும் மாதுளம் பழ ஜாம் செய்யலாம்...

Published On 2023-04-19 09:12 GMT   |   Update On 2023-04-19 09:12 GMT
  • குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும்.
  • இன்று இந்த ஜாம் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மாதுளை முத்துகள் - 2 கப்

எலுமிச்சைப்பழம் - 2

சர்க்கரை - 2 கப்

செய்முறை:

மாதுளையை உதிர்த்து அதற்கு சமமாக சர்க்கரையை அளந்து எடுத்துக் கொள்ளவும்.

மாதுளை முத்துகளை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுத்து வைக்கவும். விதை அரைபடாமல் இருக்க வேண்டும். எனவே, மாதுளை முத்துகளை லேசாக அரைத்தால் போதும்.

அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து அரைத்த மாதுளை முத்துகளைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து, 2 நிமிடங்களுக்குக் கிளறவும்.

பிறகு, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்து மாதுளை முத்துகளோடு சேர்ந்து வரும் போது, எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து நன்கு கிளறவும்.

கலவையில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி, பிசுபிசுப்பு பதம் வரும்வரை கிளறவும். இதற்கு சுமார் 7 நிமிடங்கள் ஆகலாம்.

இப்போது அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான மாதுளை ஜாம் தயார்.

கலவை ஆறிய பின்னர் சுத்தமான கண்ணாடி பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்யவும். பல வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

குறிப்பு:

மிகவும் சுவையான இந்த ஜாம் செய்யும்போது அதிகமாக வேக வைத்துவிட வேண்டாம். பிறகு ரப்பர் போலாகிவிடும். பிசுபிசுப்பு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். உடலுக்கு சத்து தருவதோடு ரத்தவிருத்திக்கும் ஏற்றது மாதுளை. மாதுளையின் விதைகள் வேண்டாம் என்று நினைத்தால், மாதுளை முத்துகளை நன்கு அரைத்து வடிகட்டி சாறெடுத்து பிறகு ஜாம் செய்யலாம்.

ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

Tags:    

Similar News