சமையல்

இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

Published On 2024-04-21 10:30 GMT   |   Update On 2024-04-21 10:30 GMT
  • பழ எசென்ஸ் விட்டு லட்டு பிடித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
  • தேங்காய்க்கு பதில் கசகசாவை அரைத்து மோர்க்குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.

* இஞ்சியுடன் ஏலக்காயை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். டீ தயாரிக்கும்போது கொதி வந்த பின்பு இதை ஒரு டீஸ்பூன் அளவிற்கு போட்டு பருகவும். டீ சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

* மோர்க் குழம்பு செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக கசகசாவை சேர்த்து அரைத்து மோர்க்குழம்பு செய்தால் கெட்டியாக, சுவையாக இருக்கும்.

* பொட்டுக்கடலை உருண்டை பிடிக்கும்போது வறுத்த வேர்க்கடலையையும், பொடித்த முந்திரியையும் சேர்த்துப் பிடித்தால் சுவையாக இருக்கும்.

* லட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு பழ எசென்ஸ் விட்டுப் பிடித்தால் லட்டு சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

* முட்டையை வேக வைக்கும் போது சில சமயங்களில் வெடிப்பு ஏற்பட்டு வெள்ளைக்கரு வெளியே வரக்கூடும். அப்படி வெளியில் வராமல் இருக்க வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை சேர்க்கவும். இதனால் முட்டையின் ஓடு வெடித்தாலும் உள்ளே இருப்பவை வெளியில் வராது.

* பூசணிக்காய் மீந்துவிட்டால் அதை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் அடுத்த நாள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.

* முட்டை கெடாமல் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் மூழ்கும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அந்த முட்டை கெட்டு விட்டது. அது தண்ணீரில் மூழ்கினால் அந்த முட்டையை சமைப்பதற்கு பயன்படுத்தலாம்.

* ஒரு கப் அளவு பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து காய்கறி சாலட் செய்யும்போது சேர்த்துக் கொள்ளுங்கள். சுவை நன்றாக இருக்கும். உடல் நலத்திற்கும் ஏற்றது.

* பச்சை மிளகாயில் உள்ள காம்பு பாகத்தை நீக்கி விட்டு அதை பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு பிரெஷ் ஆக இருக்கும்.

* பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டால் சாதம் உதிரி உதிராக இருக்கும்.

Tags:    

Similar News