லைஃப்ஸ்டைல்

சத்தான ஸ்நாக்ஸ் சிவப்பு அரிசி வாழைப்பழ பணியாரம்

Published On 2017-08-02 03:30 GMT   |   Update On 2017-08-02 03:30 GMT
குழந்தைகளுக்கு சத்தான உணவை கொடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சிவப்பு அரிசியில் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி மாவு - ஒரு கப்,
கோதுமை மாவு - கால் கப்,
வாழைப்பழம் - 2,
பொடித்த வெல்லம் - அரை கப்,
தேங்காய் துருவல் - கால் கப்,
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு.

செய்முறை:

சிவப்பு அரிசி மாவு, கோதுமை மாவு, வாழைப்பழம், வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையுடன் தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும்.

குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் அல்லது எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

சத்தான ஸ்நாக்ஸ் சிவப்பு அரிசி வாழைப்பழ பணியாரம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News