லைஃப்ஸ்டைல்

சத்தான டிபன் கேழ்வரகு கீரை ஊத்தப்பம்

Published On 2017-06-30 05:17 GMT   |   Update On 2017-06-30 05:17 GMT
காலையில் சத்தான உணவை சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைக்கும். இன்று கேழ்வரகு கீரை ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

இட்லி மாவு - 1 கப்
முழு கேழ்வரகு - 1 கப்
கீரை - 1 கட்டு (சிறுகீரை, முளை கீரை, வெந்தயகீரை, முருங்கைகீரை சிறிது ஆயில் இல் வதக்கி சேர்க்கலாம்)
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு



செய்முறை :

* வெங்காயம், கீரை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கீரையை போட்டு பாதியளவு வேகவைத்து கொள்ளவும்.

* கேழ்வரகை 2 மணி நேரம் ஊற வைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இட்லி மாவை சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.

* அடுத்து அதில் வெங்காயம், கீரை, ப.மிளகாய், உப்பு, வதக்கிய கீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தம் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும்.

* சத்தான சுவையான கேழ்வரகு கீரை ஊத்தப்பம் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News