உடற்பயிற்சி

யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம், யாரெல்லாம் செய்யக்கூடாது

Published On 2024-05-22 09:54 GMT   |   Update On 2024-05-22 09:54 GMT
  • ஒவ்வொரு 56 நாட்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்ய முடியும்.
  • ஒரு ஆண்டிற்கு சுமார் 6 முறை ரத்த தானம் செய்ய முடியும்.

ரத்த தானம் செய்வதில் பல வழிகள் உள்ளன. நீங்கள் ரத்தத்தை தானம் செய்யலாம் அல்லது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லேட்கள் போன்ற ரத்த கூறுகளை மட்டும் தானம் செய்யலாம்.

ரத்த தானம் செய்யும்போது அதில் உள்ள எந்திரமானது ரத்தத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து அவற்றை உடலுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு ரத்த நன்கொடையை செய்யும்போதும் அதை எவ்வளவு பாதுக்காப்பாக செய்ய முடியும் என்பதுதான் மிகவும் முக்கியம்.

ஒவ்வொரு 56 நாட்களுக்கு ஒருமுறையும் நீங்கள் முழுமையாக ரத்த தானம் செய்ய முடியும். எனவே ஒரு ஆண்டிற்கு சுமாராக 6 முறை ரத்த தானம் செய்ய முடியும் என நியூயார்க் ரத்த மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான புரூஸ் சாச்சிஸ் கூறுகிறார். அதே போல நீங்கள் ரத்த பிளேட்லேட்கள் மற்றும் பிளாஸ்மாவை அதிகமாக தானம் செய்யலாம்.

யாரெல்லாம் ரத்த தானம் செய்ய கூடாது?

ரத்த தானம் செய்வதற்கு குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால் ஆரோக்கியமான உடல் நிலையை கொண்டிருக்கும் பட்சத்தில் 16 முதல் 17 வயதுடையவர்கள் பெற்றோர் அல்லது பாதுக்காவலரின் ஒப்புதலுடன் நன்கொடை அளிக்கலாம். ஆனால் 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவரிடம் கடிதம் பெற்ற பிறகே ரத்த தானம் செய்ய முடியும்.

அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 38 சதவீதம் மக்கள் ரத்த தானம் செய்யும் தகுதியை பெற்றுள்ளனர். சில தற்காலிகமான காரணங்கள் கூட ரத்த தானம் செய்வதை தடுக்கின்றன.

கர்ப்பிணிகள்

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கூடுதல் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கர்ப்ப காலங்களில் லேசான ரத்த சோகை ஏற்படுவதாலும் அவர்கள் ரத்த தானம் செய்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளன, எனவே அவர்கள் ரத்த தானம் செய்ய முடியாது. அவர்கள் குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு பிறகே ரத்த தானம் செய்யும் தகுதியை பெறுகின்றனர்.

மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள்

சில மருந்துகளை உட்கொள்பவர்கள் தற்காலிகமாக ரத்த தானம் செய்யும் தகுதியை இழக்கின்றனர். அவர்களை எடுத்துக்கொள்ளும் மருந்தை பொறுத்து காலம் மாறுப்படும். எடுத்துக்காட்டாக கூமாடின் அல்லது வார்ஃபிலோன் போன்ற மருத்துகளை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் அந்த மருந்தை நிறுத்திய ஏழு நாட்களுக்கு பிறகே நீங்கள் ரத்த தானம் செய்ய முடியும்.

ஆனால் தடிப்பு தோல் அழற்சிக்கான வாய்வழி ரெட்டினாய்டு சிகிச்சையான சோரியாடேன் செய்தவர்கள் மூன்று ஆண்டுகள் கழித்தே ரத்த தானம் செய்ய முடியும்.

Tags:    

Similar News