பொது மருத்துவம்

இலுப்பைப் பூ சம்பா அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

Published On 2024-05-24 05:46 GMT   |   Update On 2024-05-24 05:46 GMT
  • அரிசியையே நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தினர் தமிழர்கள்.
  • தமிழர்கள் கண்டறிந்த நாட்டு அரிசி ரகங்கள் 1000-க்கும் மேற்பட்டவை.

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது தமிழர்கள் உணவு கலாசாரமாக இருந்தது. தமிழர்களின் முதன்மை உணவாக இருந்துவரும் அரிசியில் வெவ்வேறு ரகங்களை உருவாக்கி, அரிசியையே நோய் தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தினர்.

தமிழர்கள் கண்டறிந்த நாட்டு அரிசி ரகங்கள் 1000-க்கும் மேற்பட்டவை, என்கிறார்கள் வேளாண் ஆய்வாளர்கள். அந்த அரிசி ரகங்களில் ஒன்றான இலுப்பைப்பூ சம்பா, தனித்துவமான மருத்துவ குணம் கொண்டது. மேலும் இது, அரிதான அரிசி ரகம் ஆகும்.

இலுப்பைப்பூவின் நறுமணம் இந்த அரிசியிலும் வெளிப்படுவதன் காரணமாக இந்த அரிசிக்கு அதன் பெயர் வந்தது. இலுப்பைப்பூ சம்பா சாப்பிட மிகவும் மென்மையானது.

பக்கவாத பாதிப்பை தடுக்க முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனராம். மூட்டு வலி, முடக்குவாத நோய்களை போக்கும். நோயால் பலவீனமானவர்களுக்கு இலுப்பைப்பூ சம்பா அரிசி கஞ்சியை தொடர்ந்து கொடுத்து வந்தால் உடல் பலவீனம் நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

இந்த அரிசி உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலமாக்கும். முடக்குவாதத்தை தடுக்கிறது. உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.

மிகக்குறைவான குளுக்கோஸ் அளவை கொண்டதால் நீரிழிவு நோயாளிகள் இலுப்பைப்பூ சம்பா அரிசியை தாராளமாக உட்கொள்ளலாம்.

மேலும், உடலில் எலும்புகள் பலவீனம் அடைவதை தடுத்து வலுப்படுத்தும் குணம் இந்த அரிசிக்கு உண்டு.

இதனால், வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு பலவீனத்தை போக்கவும், வளரும் குழந்தைகளுக்கு வலுவான எலும்புகள் உருவாகவும் இலுப்பைப்பூ சம்பா கஞ்சியை தரலாம்.

இலுப்பை பூ சம்பா அரிசியின் நன்மைகள்:

இலுப்பை பூ சம்பா அரிசி வீக்கம், மூட்டு பிரச்சனைகள், செயலிழப்பு மற்றும் நோய் எதிர்ப்பு குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் கஞ்சி, சிகிச்சை பெறும் அனைவருக்கும், வயதானவர்கள் அல்லது குழந்தைகளுக்கு ஆற்றலை கொடுக்கிறது.

இந்த அரிசி ஒரு இயற்கை தோட்டத்தில் பயிரிடப்பட்டு அரைக்கப்படுகிறது. இதன் விளைவாக, விவசாயத்தில் செயற்கை அல்லது களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்துவதால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

காலப்போக்கில் அடிக்கடி உட்கொண்டால், உடலில் உள்ள கலவை அல்லது களைக்கொல்லி எச்சத்தின் தாக்கங்களை மாற்றுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

கரிம உணவு பொதுவாக மிகவும் சுவையாக இருக்கும், உங்கள் பசியை அதிகரிக்கிறது மற்றும் போதுமான ஊட்டச்சத்தை பாதுகாக்க அல்லது மேம்படுத்த உதவுகிறது.

இந்த அரிசியில் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது பக்கவாதத்தைத் தடுக்கிறது மற்றும் கீல்வாதம், மூட்டு சேதம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Tags:    

Similar News