- காபி குடிப்பது அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
- புதிய கொழுப்பு செல் உருவாவதை குறைக்கிறது.
பொதுவாக காபி உடலுக்குத் தீங்கு என்பார்கள். ஆனால், பிளாக் காபியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கல்லீரலைப் பாதுகாப்பதில் முதலிடம் வகிக்கின்றன. எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயிலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கும் பண்புகள் கல்லீரல் கொழுப்பு சேர்வதைத் தடுக்கின்றன.
அல்சைமர் நோய் என்பது மூளைப் பிரச்சனையாகும். இது நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறனை அழித்து, மிக எளிய பணிகளைச் செய்வதைக் கூட கடினமாக்குகிறது. காபி குடிப்பது அல்சைமர் நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
அல்சைமர் நோய் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், 2-3 கப் காபி குடிப்பதால் டிமென்ஷியா மற்றும் அல்சைமர் அபாயத்தை 65 சதவீதம் குறைக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பு காபியை தொடர்ந்து உட்கொள்வது உடல் எடையை குறைக்கவும் உதவும். ஹார்வர்ட் டி.எச். சான் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த், எடை குறைப்பதில் கருப்பு காபியை உட்கொள்வதால் நேர்மறையான விளைவுகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
எடை இழப்பை ஊக்குவிக்கும் மற்றும் உடலில் குளுக்கோஸ் உற்பத்தியை மெதுவாக்கும் குளோரோஜெனிக் அமிலங்கள் இதில் உள்ளதாக நிபுணர் விளக்குகிறார். புதிய கொழுப்பு செல் உருவாவதை குறைக்கிறது. எனவே எடை இழப்புக்கு இது முக்கியமானது. கூடுதலாக, நீங்கள் சர்க்கரை சேர்க்கவில்லை என்றால் கலோரிகள் குறைவாக இருக்கும். எனவே எதுவானாலும் அளவோடு உட்கொள்வது உடலுக்கு உகந்தது.