லைஃப்ஸ்டைல்

உடல் பருமனை குறைக்க என்னவெல்லாம் செய்யக் கூடாது?

Published On 2018-02-28 02:55 GMT   |   Update On 2018-02-28 02:55 GMT
வாழ்க்கை முறையை மாற்றுவது உடல்பருமனைக் குறைக்க நிச்சயம் உதவும். மூன்று வேளையும் சரியான நேரத்துக்கு சரிவிகித உணவு சாப்பிட வேண்டும்.
* அதிகக் கொழுப்பு, அதிகச் சர்க்கரை உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* உப்பு, காரம் நிறைந்த, எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* துரித உணவுகளைச் சாப்பிடக்கூடாது.

* புகை பிடித்தல், மதுப்பழக்கம் கூடாது.

* பொரித்த உணவுகளை சாப்பிடக்கூடாது.

* மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். தியானம், யோகா போன்றவற்றைச் செய்யலாம்.

மேலும் பொதுவாக, வாழ்க்கை முறையை மாற்றுவது உடல்பருமனைக் குறைக்க நிச்சயம் உதவும். மூன்று வேளையும் சரியான நேரத்துக்கு சரிவிகித உணவு சாப்பிட வேண்டும். கலோரிகளை எரிக்க, சாப்பிட்ட பின்னர் கொஞ்ச தூரம் நடக்கலாம். தினமும் உடற்பயிற்சியை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை, வெளியே சென்று விளையாடுவதற்கான ஆர்வத்தை அவர்களிடம் ஏற்படுத்த பெற்றோர் முயற்சிக்க வேண்டும். பெற்றோரும் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடலாம். இதனால் உடல்பருமன் குறைவதோடு குழந்தைகளுக்காகவும் நேரம் ஒதுக்குவதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். இந்த முறைகளைப் பின்பற்றினால், உடல்பருமன் குறைவதும், அழகான உடல்வாகைப் பெறுவதும் உறுதி.
Tags:    

Similar News