லைஃப்ஸ்டைல்

உணவின் மீது கவனம் முழுவதும்

Published On 2017-10-25 04:16 GMT   |   Update On 2017-10-25 04:16 GMT
உணவைக் கவனித்து ரசித்து உண்டு, நமது உடல் மட்டுமில்லாமல் மன உணர்வுகள், ஆன்மா ஆகியவற்றுக்கும் போஷாக்கு அளிக்க நாமே வாய்ப்பளிக்க வேண்டும்.
உணவு உண்பது வேள்விக்குச் சமமானது. நமது உடல் அங்ககப் பொருட்களை (உணவை) உடலின் திசுக்களாக மாற்றும் வேலையை செய்கிறது. இந்த ரசவாதத்துக்கு உரிய முக்கியத்துவம் தர மறந்துவிடுகிறோம். அவசரமாக உண்பது, வேலை செய்து கொண்டோ, படித்துக்கொண்டே, பேசிக் கொண்டோ, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டோ உண்கிறோம்.



தினசரி நடக்கும் புனிதமான வேலை உணவு உண்ணல், அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். உணவைக் கவனித்து ரசித்து உண்டு, நமது உடல் மட்டுமில்லாமல் மன உணர்வுகள், ஆன்மா ஆகியவற்றுக்கும் போஷாக்கு அளிக்க நாமே வாய்ப்பளிக்க வேண்டும். இந்த முறையில் உண்ணும் போது, குறைந்த அளவில் உண்டாலே நிறைவாக இருக்கும். இடையே நொறுக்குத்தீனிக்குத் தேவை வராது.

நல்ல மனநிலையில் உண்ணுதல்:

கவலை, கோபம், பொறாமை, டென்சன் ஆகிய உணர்வுகள் வாழ்வில் ஓர் அங்கமாகி விட்டன. உணவு உண்ணும் போது கூட இவற்றிலிருந்து தப்ப முடிவதில்லை. இத்தகு உணர்வுகளுக்கிடையே உண்ணும் உணவு நஞ்சாகிவிடுகிறது. செரிமானம் ஆவதில்லை. அல்சர், அசிடிட்டி போன்ற நோய்கள் இவ்வகை எதிர்மறை உணர்வுகளுடன் உண்பதால் வருகின்றன. புற்றுநோய் கூட வரலாம்! ஆகவே மனதை இலகுவாக வைத்துக்கொண்டு எதிர்மறை எண்ணங்களுக்கு இடந்தராமல் மகிழ்ச்சியான மனநிலையிலேயே உண்ண வேண்டும்.

புதிதாகச் சமைத்த, வீட்டில் சமைத்த உணவுகள்:


புதிதாகச் சமைக்கப்பட்ட, சூடான உணவையே உட்கொள்ள வேண்டும், சமைத்து குளிர் சாதனப் பெட்டியில் வைத்து தேவையான பொழுது எடுத்து, மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதல்ல! பாதி சமைத்த, பதப்படுத்திய உணவுகள் உடல்நலனுக்கு உகந்தவை அல்ல. வெளியில் சாப்பிடும் உணவு அதிக சுவையுள்ளதாக இருந்தாலும் வீட்டு உணவுக்கு ஈடாகாது. உணவு சமைப்பவரின் எண்ணங்கள், உணர்வுகள் உண்பவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

- டாக்டர். ஜெ. விஜயாபிரியா
(போன் 0422-4322888, 2367200)
Tags:    

Similar News