லைஃப்ஸ்டைல்

நீரிழிவு நோயின் அறிகுறிகளை ஆரம்பகட்டத்திலேயே அறிந்து கொள்வது எப்படி?

Published On 2017-05-24 02:58 GMT   |   Update On 2017-05-24 02:58 GMT
நீரிழிவு நோய் பெரும்பாலும் வயதானவர்களை அதிகமாக தாக்கும் என்ற நிலை மாறி குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
நீரிழிவு நோய் பெரும்பாலும் வயதானவர்களை அதிகமாக தாக்கும் என்ற நிலை மாறி குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஆரம்பகட்டத்திலேயே நோய் அறிகுறிகளை கண்டறிந்து சிகிச்சை பெற்றால், அதிலிருந்து விடுபட்டு விடலாம்.

அதிக அளவில் சிறுநீர் கழிப்பது, அடிக்கடி பசி எடுப்பது, உடல் எடை குறைவது, அதிகாலையில் கடும் தாகம் எடுப்பது போன்றவை நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள். மன அழுத்தமும் நீரிழிவு நோய்க்கு வித்திடும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. போதிய உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாதபோது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும், உடல் பருமன் பிரச்சினையும், கொழுப்பின் அளவு அதிகரிப்பதும், அதனை கட்டுப்படுத்த போதிய அளவு இன்சுலின் சுரப்பது தடைபடுவதும் நோய் பாதிப்புக்கு காரணமாகிவிடுகிறது.



நீரிழிவு நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படுபவர்கள் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அசைவ பிரியர்களாக இருந்தால் மாமிசத்தில் உள்ள கொழுப்பை அறவே நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும். மேலும் மாமிசத்தை எண்ணெய்யில் பொரிக்காமல், குழம்பாக வைத்து சாப்பிடுவது நல்லது. துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

முட்டையின் மஞ்சள் கருவை ஒதுக்கிவிட வேண்டும். பச்சை காய்கறிகள், தானியங்களை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும். டீ, காபி பருக விரும்பினால் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி, பனங்கற்கண்டு, வெல்லம் போன்றவற்றை பயன்படுத்தலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் இதை எல்லாம் டாக்டர் ஆலோசனை பெற்றே பயன் படுத்த வேண்டும்.
Tags:    

Similar News