லைஃப்ஸ்டைல்

உடலுக்கு வைட்டமின்கள் ஏன் அவசியம்?

Published On 2017-05-15 03:11 GMT   |   Update On 2017-05-15 03:11 GMT
பொதுவாக, மருத்துவம், ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகளில் பல்வேறு வைட்டமின்களின் அவசியம் குறித்து வலியுறுத்தப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக, மருத்துவம், ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகளில் பல்வேறு வைட்டமின்களின் அவசியம் குறித்து வலியுறுத்தப்படுகிறது.

ஏன் வைட்டமின்கள் அவசியம்?

ஏ, பி, சி, டி, கே போன்ற ஒவ்வொரு வைட்டமினும் ஒவ்வொரு உடல் உறுப்பின் நலனுக்கு உறுதுணையாக உள்ளது.

இந்த வைட்டமின்களின் குறைபாடு ஏற்படும்போது, நம் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

எந்த வைட்டமின் அளவு குறைந்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதைப் பார்ப்போம்...

* வைட்டமின் பி, இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால், உதட்டு வெடிப்பு மாதிரியான பிரச்சினைகள் தோன்றலாம். இக் குறைபாட்டைத் தவிர்க்க, முட்டைகள், மீன், வேர்க்கடலை போன்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும்.



* வைட்டமின் ஏ, கே, இ, டி, பி7 போன்ற சத்துகள் குறைவாக இருந்தால், முடி உதிர்தல் பிரச்சினை ஏற்படலாம். இதற்கு, உலர்ந்த பழங்கள், வாழைப்பழம், காளான், பூசணி விதைகள் போன்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

* வைட்டமின் ஏ, டி ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால், உடல் முழுவதும் பருக்கள் போன்ற சருமப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். அதைத் தவிர்க்க, உலர்ந்த பழங்கள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், பாதம் போன்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

* வைட்டமின் பி, பி12, பி9, பி6 போன்ற சத்துகளின் குறைபாடு இருந்தால், உடலில் அரிப்பு, உணர்ச்சியின்மை போன்ற மாற்றங்கள் ஏற்படலாம். இதற்கு கடல் உணவுகள், முட்டை, பருப்பு உணவுகள் போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.

* வைட்டமின் பி, தாது உப்புகள், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக் குறைபாடுகள் இருந்தால், தசைப்பிடிப்பு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இக்குறைபாடுகளைப் போக்க பாதாம், வாழைப்பழம், கீரை, ஆப்பிள் போன்ற உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

* வைட்டமின் சி சத்துக் குறைபாடு இருந்தால், ஈறுகளில் ரத்தம் வழிதல், செரிமானக்கோளாறு, மூக்கில் ரத்தம் கசிதல், குணமாகாத புண்கள் போன்ற பிரச்சினைகள் ஏற் படும். இதற்கு தினமும் எலுமிச்சம் பழச்சாறு பருக வேண்டும்.
Tags:    

Similar News