லைஃப்ஸ்டைல்

புதிய பழங்கள்... அரிய பலன்கள்...

Published On 2017-04-30 04:42 GMT   |   Update On 2017-04-30 04:42 GMT
இப்போதெல்லாம் சில புதிய வகைப் பழங்களை சந்தையில் நம்மால் பார்க்க முடிகிறது. அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
இப்போதெல்லாம் சில புதிய வகைப் பழங்களை சந்தையில் நம்மால் பார்க்க முடிகிறது. அவற்றின் சுவை, சத்துகள் குறித்த யோசனையால் அந்தப் பழங்களை வாங்குவதில் நமக்குக் கொஞ்சம் தயக்கமும் ஏற்படுகிறது. ஆனால் அவற்றில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அவை பற்றி...

டிராகன் பழம்: விந்தையான தோற்றம் கொண்ட இப்பழம், தித்திக்கும் சுவையை அளிப்பது. இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க டிராகன் பழம் உதவுகிறது.

ரம்புட்டான் பழம்: ரம்புட்டான் பழம் தெற்காசியாவை தாயகமாகக் கொண்டது. இந்தப் பழத்தில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இது நீரிழிவு மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

கிவி: கிவி பழமும் மிகவும் சுவையானது. இப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.

ஆலிவ்: பல்வேறு நிறங்களில் உள்ள ஆலிவ் பழங்களில் கருப்பு மற்றும் பச்சை நிறமுள்ள ஆலிவ் பழங்கள்தான் மிகவும் சிறந்தவை. இவற்றை உட்கொண்டால் எலும்புகள் வலிமையடையும், புற்றுநோய் தடுக்கப்படும்.



பேசன் பழம்: பிரேசிலை தாயகமாகக் கொண்ட இந்தப் பழம், நார்ச்சத்து அதிகம் நிறைந்த மென்மையான சதைப்பகுதியைக் கொண்டது. இது புற்றுநோய் மற்றும் தூக்கமின்மை பிரச்சினையை குணமாக்குவதில் மிகவும் சிறந்தது.



மங்குஸ்தான் பழம்: ஸ்ட்ராபெர்ரி சுவையில் இருக்கும் இந்த மங்குஸ்தான் பழம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. குறிப்பாக இது வயிற்றுப்போக்குக்கு உடனடி தீர்வளிக்கிறது.
Tags:    

Similar News