வழிபாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 14-ந்தேதி நடை திறப்பு: ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

Published On 2023-05-12 05:37 GMT   |   Update On 2023-05-12 05:37 GMT
  • வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது.
  • 15-ந்தேதி முதல் 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை வைகாசி மாத பூஜை நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் (14-ந்தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். மறுநாள் (15-ந்தேதி) முதல் 5 நாட்கள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

சபரிமலையில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், வைகாசி மாத பூஜைக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News