வழிபாடு
இந்து சமுதாய மீனவர்கள் கொண்டு வந்த கடல்நீரை வைத்து சிறப்பு தொழுகை செய்யப்பட்டது.

ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா இன்று தொடக்கம்: ஜூன் 11-ந்தேதி கொடியேற்றம்

Published On 2022-06-01 07:56 GMT   |   Update On 2022-06-01 07:56 GMT
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ள சந்தனக்கூடு திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ள சந்தனக்கூடு திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

சந்தனக்கூடு திருவிழா இன்று ஜூன் 1-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு விழா தொடங்குகிறது. இதையொட்டி இந்து சமுதாய மீனவர்கள் கொடுத்த கடல் நீரால் இன்று காலை தர்கா மண்டபத்தை சுத்தம் செய்தனர்.

வருகிற 11-ந்தேதி கொடியேற்றம், 23-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 24-ந் தேதி அதிகாலை பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். கொடியேற்றம் 30-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் பாக்கிர்சுல்தான் லெப்பை, செயலாளர் சிராஜுதீன் லெப்பை, துணை தலைவர் சாதிக் பாட்ஷா லெப்பை மற்றும் நிர்வாக்குழு உறுப்பினர்கள், தர்ஹா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News