ஆன்மிகம்
வடபத்திரகாளி அம்மன்

காவல் கிணறு வடபத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2021-09-08 05:51 GMT   |   Update On 2021-09-08 05:51 GMT
காவல்கிணறு வடபத்திரகாளி அம்மன் கோவிலில் நாளை காலை 10.30 மணிக்கு மேல் கோபுர கலசங்கள் மற்றும் பரிவார ஸ்தூபிகளுக்கு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.
காவல்கிணறு வடபத்திரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு மங்கள இசை, தேவார திருமுறை பாராயணம், மகா தீபாராதனை, கலச பூஜை, நவக்கிரக ஹோமம், தீர்க்க சங்கரனம், முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இன்று (புதன்கிழமை) 2, 3-ம் கால யாகசாலை பூஜை, சுமங்கலி பூஜை, தன பூஜை, பூர்ணாகுதி, விமான கலசம் பிரதிஷ்டை உள்ளிட்டவை நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு 4-ம் கால யாகசாலை பூஜை, 8 மணிக்கு கணபதி வழிபாடு, 8.30 மணிக்கு சூர்ய கும்ப பூஜை, தோரண பூஜை, 9 மணிக்கு நாடி சந்தானம் உள்ளிட்டவை நடக்கின்றது.

தொடர்ந்து காலை 10.30 மணிக்கு யாத்ரா தானம், கடம் யாக சாலையில் இருந்து புறப்படுதல், 10.30 மணிக்கு மேல் கோபுர கலசங்கள் மற்றும் பரிவார ஸ்தூபிகளுக்கு கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.
Tags:    

Similar News