ஆன்மிகம்
கள்ளழகர்

கள்ளழகர் கோவிலில் முப்பழ உற்சவ விழா

Published On 2020-07-06 05:56 GMT   |   Update On 2020-07-06 05:56 GMT
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் இந்த வருடத்திற்கான ஏகாந்த திருமஞ்சன சேவையும், மாலையில் முப்பழ உற்சவ விழாவும் நடந்தது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் முப்பழ உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் நேற்று காலை ஏகாந்த திருமஞ்சன சேவையும், மாலையில் முப்பழ உற்சவ விழாவும் கள்ளழகர் கோவிலில் நடந்தது. இதில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை மூலவர் சன்னதி முன்பாக வைக்கப்பட்டு பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீப ஆராதனை நடந்தது.

இதைபோலவே இந்த கோவிலின் உபகோவிலான தல்லாகுளம் பெருமாள் கோவிலிலும் முப்பழ உற்சவ விழா நடந்தது. அலங்கார திருமஞ்சனமாகி தேவியர்களுடன் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் சர்வ அலங்காரத்தில் காட்சி தந்தார். தற்போது முழு ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. பட்டர்களும், கோவில் பணியாளர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, அலுவலக கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் பலர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News