ஆன்மிகம்
பழனியில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம். (உள்படம்:சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நாராயணபெருமாள்)

பழனி லட்சுமிநாராயண பெருமாள் கோவிலில் சித்திரைத்திருவிழா தேரோட்டம்

Published On 2018-04-30 06:29 GMT   |   Update On 2018-04-30 06:29 GMT
பழனி லட்சுமி நாரா யண பெருமாள் கோவிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பழனி முருகன் கோவிலின் உப கோவிலாக லட்சுமி நாராயண பெருமாள் கோவில் விளங்குகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் பழனி மேற்கு ரதவீதியில் அமைந் துள்ளது. இந்த கோவி லில் மூலவரான பெருமாள் அமர்ந்த நிலையில் காட்சிய ளிக்கிறார். அவ ருடைய மடியில் லட்சுமி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக் கிறார். இங்கு ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார் ஆகியோ ருக்கு தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரு கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங் கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சி யான லட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாணம் கடந்த 27-ந் தேதி நடை பெற்றது. நேற்று தேரோட்டம் நடந்தது. அதையொட்டி லட்சுமி நாராயண பெருமா ளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருளுதலும், தீபா ராதனையும் நடைபெற்றது. பின்னர் முக்கிய பிரமுகர்கள் சிதறு தேங்காய் உடைத்த பின் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பழனி கோவில் இணை ஆணையர் செல்வ ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேர் வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தேர் வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரதவீதி வழியாக வலம் வந்து காலை 8.10-க்கு நிலை வந்து சேர்ந்தது. அதையடுத்து லட்சுமி நாராயண பெருமாளுக்கு தீபா ராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங் கப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) கொடியிறக்குதல் நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகள் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. 
Tags:    

Similar News