ஆன்மிகம்
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்கு அலங்கரிக்கப்பட்ட பூ ரதம் சென்ற போது எடுத்த படம்.

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா

Published On 2018-04-23 05:08 GMT   |   Update On 2018-04-23 05:08 GMT
மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மணப்பாறை நகரின் மையப்பகுதியில் வேப்பிலை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழாவின் தொடக்கமாக நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதற்காக வேப்பிலை மாரியம்மன் கோவில் சார்பில் பூ ரதம் பெருமாள் கோவில் அருகே அக்ரஹாரத்தில் அலங்கரிப்பட்டு மணப்பாறை பஸ் நிலையம் முன்பு உள்ள முனியப்பசாமி கோவில் அருகே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து மணப்பாறை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும், பக்தர்கள் ஊர்வலமாகவும் பூ எடுத்து வந்தனர். பின்னர் வேப்பிலை மாரியம்மன் கோவில் பூ ரதம் முன்னே செல்ல அதை தொடர்ந்து மற்ற வாகனங்கள் சென்றன.

பூ ரதம் மற்றும் வாகனங்கள் மாரியம்மன் கோவிலை வந்தடைந்ததும், கோவில் பரம்பரை அறங்காவலர் ஆர்.வீ.எஸ்.வீரமணி, கோவில் நிர்வாக அலுவலர் வே.பிரபாகர், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரப்பட்டி ஊர் நாட்டாண்மைகள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வேப்பிலை மாரியம்மனுக்கு பூச்சொரிதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர். 
Tags:    

Similar News