ஆன்மிகம்

துன்பங்களை விலக்கும் பிரதோஷம்

Published On 2018-03-19 10:06 GMT   |   Update On 2018-03-19 10:06 GMT
பிரதோஷ தினங்களில் சிவன் கோவில்களுக்கு சென்று இறைவனை தீபம் ஏற்றி வழிபாடு செய்வது துன்பங்களை விலக்கும்.
சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட தினம், கார்த்திகை மாதம் சனிக்கிழமை திரியோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரியோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது. மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி நிகழ்வுக்கு முன்னதாக வரும் பிரதோஷமும், ‘மகாபிரதோஷம்’ என்றே அழைக்கப்படும். அன்றைய தினம் சிவன் கோவில்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்வது துன்பங்களை விலக்கும்.

குறிப்பாக தஞ்சை மாவட்டம் திருவையாறு, திருச்சி மாவட்டம் திருப்பைஞ்சீலி, திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம், கும்பகோணம் அருகே உள்ள திருக்கோடிக்காவல் ஆகிய சிவதலங்களில் வழிபாடு செய்வது சிறப்பானதாகும். சனிப்பிரதோஷ வழிபாடு செய்தால், ஐந்து வருடம் தினமும் ஆலயம் சென்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் மது, மங்கை, கொள்ளை, பொய் கூறுதல் இவற்றால் ஏற்படும் பாவங்களை துடைத்து நன்னெறி அடைய சனி மகாபிரதோஷம் துணைபுரியும்.

ஞாயிறு பிரதோஷம் –  சுப மங்களத்தை தரும்.

திங்கள் பிரதோஷம் –  நல்லெண்ணம், நல்அருள் தரும்.

செவ்வாய் பிரதோஷம் –  பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.

புதன் பிரதோஷம் –  நல்லபுத்திர பாக்கியம் கிடைக்கும்.

வியாழன் பிரதோஷம் –  திருமண தடை விலகி, மாங்கல்ய பலன் கிடைக்கும்.

வெள்ளி பிரதோஷம் –  எதிரிகளின் எதிர்ப்பு விலகும்.

சனிப் பிரதோஷம் –  அனைத்து துன்பங்களும் விலகும்.
Tags:    

Similar News