ஆன்மிகம்

சிவலிங்க வகைகளும் - பயன்களும்

Published On 2018-02-23 09:19 GMT   |   Update On 2018-02-23 09:19 GMT
சிவபெருமானை லிங்கவடிவில் வழிபடும் தொடர்பாகப் பல புராண வழக்குகள் உள்ளன. ஒவ்வொரு வகையான சிவலிங்கங்களை அதன் பயனையும் பார்க்கலாம்.
சிவபெருமானை லிங்கவடிவில் வழிபடும் தொடர்பாகப் பல புராண வழக்குகள் உள்ளன. திருமாலுக்கும், பிரமனுக்கும் தம் சக்தியை உணர்த்தப் பேரொளிப் பழம்பாக, அண்ணாமலையாகச் சிவபெருமான் நின்ற வரலாறு அனைவரும் அறிந்ததே, ஜோதி சொருபமே லிங்கம்.

புற்று மண் லிங்கம் - மோட்சம் தரும்
ஆற்றுமணல் லிங்கம் - பூமி லாபத்தைத் தரும்
பச்சரிசி லிங்கம் - திரவிய லாபமும்,
அன்னலிங்கம் - அன்ன விருத்தியையும் தரும்
கோமய லிங்கம் - வியாதியைத் தீர்க்கும்
வெண்ணெய் லிங்கம் - மனமகிழ்ச்சி தரும்
ருத்ராட்ச லிங்கம் - ஞான விருத்தி தரும்
விபூதிலிங்கம் - சகலசவுபாக்கியத்தையும் தரும்
சந்தன லிங்கம் - சகல இன்பத்தைத் தரும்
புஷ்ப லிங்கம் - ஆயுள் விருத்தி கொடுக்கும்
சர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பங்களைத் தரும்
மாவு லிங்கம் - உடல் வலிமை தரும்
பழ லிங்கம் - சுகத்தைத் தரும்
தயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும்
தண்ணீர் லிங்கம் - சகல மேன்மைகளையும் தரும்.
தர்ப்பைப் புல் லிங்கம் - லட்சுமி கடாட்சம்
களிமண் லிங்கம்- மனச்சாந்தி
பசுஞ்சாண லிங்கம் -ஆரோக்யம்
Tags:    

Similar News