ஆன்மிகம்
பாளையங்கோட்டை பொதிகைநகர் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ததை படத்தில் காணலாம்.

பாளையங்கோட்டை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபாடு

Published On 2017-12-27 04:42 GMT   |   Update On 2017-12-27 04:41 GMT
பாளையங்கோட்டை பொதிகைநகர் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் பொதிகை நகரில் ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை (20-வது ஆண்டு) கடந்த 22-ந் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

தினமும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், 108 கலச பூஜையும், கஜபூஜை, கோ பூஜையும் நடந்தது. காலை 7 மணிக்கு மேள, தாளம் முழங்க பால்குடம், நெய்குடம், புனித தீர்த்தம் ஆகியவை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அங்கபிரதட்சணம் செய்து பக்தர்கள் வழிபட்டனர். காலை 9.30 மணிக்கு 108 கலச அபிஷேகமும், 108 படி நெய், 508 இளநீர் உள்பட 18 வகையான அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

இதையடுத்து மதியம் 1 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு மேள தாளம் முழங்க யானை, குதிரை முன்செல்ல ஐயப்பசாமி வீதி உலா நடந்தது. இரவு 8 மணிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலியும், இரவு 10 மணிக்கு சிறப்பு பஜனையும், அலங்கார தீபாராதனையும் நடந்தது.

விழா ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News