ஆன்மிகம்

சனி பகவானை எப்போது தரிசிக்கலாம்?

Published On 2017-12-19 09:19 GMT   |   Update On 2017-12-19 09:19 GMT
இன்று சனிப்பெயர்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு சனிபகவானை எப்பொழுது, எந்த நேரத்தில் தரிசனம் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
சனிபகவான், ஒன்பது நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக சுற்றும் கிரகம். வான வீதியில் அவர் ஒரு பாகை தொலைவை கடந்து செல்வதற்கு சராசரியாக ஒரு மாத காலமாகிறது. இந்த காலம் சற்று மாறுபடும்.

சனிபகவான் ஒரு பாகையை கடப்பதற்கு எடுத்துக்கொள்ளும் ஒரு மாத காலமும் சனிப்பெயர்ச்சி நடைபெறும் காலமாகவே கொள்ள வேண்டும். ஆகையால் சனிப்பெயர்ச்சி நாளை மையமாக கொண்டு 15 நாட்களுக்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ வந்து சனி பகவானை தரிசனம் செய்யலாம். இது பூரண நற்பலன்களை தரும். 

ஜோதிட நூல்களில் சனிபகவான் அடுத்த ராசியில் ஆதிக்கம் 3 மாதங்களில் ஏற்பட்டு விடுவதாக கூறப்பட்டு உள்ளது. இதன்படி சனிப்பெயர்ச்சி தினத்தில் இருந்து 45 நாட்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ சனி பகவானை தரிசனம் செய்யலாம். இது சனிப்பெயர்ச்சி காலத்தில் தரிசனம் செய்வது பலன்களை தரும். ஒவ்வொரு நாளும் சனி யோரையில் சனி பகவானை தரிசனம் செய்தால் சனிக்கிழமையன்று தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.
Tags:    

Similar News