ஆன்மிகம்

தினமும் 27 விளக்குகள்... கிடைக்கும் பலன்கள்

Published On 2017-12-14 07:47 GMT   |   Update On 2017-12-14 07:47 GMT
நமது வீடுகளில் எந்தெந்த இடங்கள், தீபம் ஏற்றுவதால் என்னென்ன பலன்கள் என்பது குறித்து விரிவாக அறிவோம்.
கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம். அவை எந்தெந்த இடங்கள், அந்த இடங்களில் தீபம் ஏற்றுவதால் என்னென்ன பலன்கள் என்பது குறித்து விரிவாக அறிவோம்.

கோலமிடப்பட்ட வாசலில்: ஐந்து விளக்குகள்
திண்ணைகளில்: நான்கு விளக்குகள்
மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள்
நிலைப்படியில்: இரண்டு விளக்குகள்
நடைகளில்: இரண்டு விளக்குகள்
முற்றத்தில்: நான்கு விளக்குகள்

இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால் நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும். தீய சக்திகள் விலகியோடும். 

பூஜை அறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும்.

சமையல் அறையில்: ஒரு விளக்கு அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் முதலான வெளிப் பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

பின்கட்டு பகுதியில்: நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது.

ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில் மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது. ஆகையால் வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம். 

தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால் தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம்.

Tags:    

Similar News